
பறந்து திரியும் சிறு பறவையவள் -
ஆனால் உறுதியானவள்.
வண்ணங்கள் கூத்தாடும் மென் இறகுகள்
மலரின் இதழ்கொண்டும், மகரந்தத்துகள் கொண்டுமானது
எனினும் அவள் உறுதியானவள்.
பறக்கும் வெளி முழுதும் குறுகலான போதும்;
யுகங்களாலான தனிமை பின் தொடர்ந்த போதும்;
திறக்காத தன் கதவினை தென்றல் மீண்டும் மீண்டும்
மறுதலித்த போதும்;
அலறலுடன் ஆடைகள் யாவும் கலைக்கப்பட்ட போதும்;
தன் நடன அசைவுகள் யாவும் உறைந்த போதும்;
தன் கீதங்களனைத்தும் மௌனித்த போதும்;
சிலுவைகள் சிதறிக்கிடக்கும் வனத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட போதும்;
தன்னால் மறித்துவிட இயலாத போதும்;
அல்லது
தன்னிடம் உறுதியே இல்லாத போதும் கூட
அவள் வெகு உறுதியானவள்தான்
ஏனெனில்
அவள் ஒரு கானகப்பட்சி
வலையுலகத்திற்கு வரவேற்கிறோம். இந்த வலைவெளியையும் உன் சிறகுகள் பறந்து திரியட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDelete